கல்வி

  • பெண்களுக்கு மார்க்க , அரபுக் கல்விக்காக ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி.
  • ஜாமிஉல் இஹ்ஸான் பள்ளிவாசலில் பகுதி நேர ஹிப்ழ் வகுப்பு. இது தினந்தோறும் அஷ்ஷைக் ரௌஷான் (அல் அப்பாஸி) அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. உதவியாளராக அஷ்ஷைக் எம்.ஏ. முஹம்மது (அல் அப்பாஸி) அவர்கள் கடமையாற்றுகிறார்.
  • ஜாமிஉல் இஹ்ஸானில் குர்ஆன் மத்ரஸா. இதில்  அஷ்ஷைக் ரௌஷான் (அல் அப்பாஸி) , அஷ்ஷைக் அழ்ஹர் , ஆசிரியர் ஹபீபுர் ரஹ்மான் , ஆசிரியர் ஹபீல் ஆகியோர் கடமை புரிகின்றனர். இதில் சுமார் 150 பேர் பயில்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதியதெரு றவ்ழதுல் அத்பாலிலும் குர்ஆன் மத்ரஸா. இதில் அஷ்ஷைக் எம்.ஏ. முஹம்மது (அல் அப்பாஸி) கடமை புரிகின்றார்.
  • மாத்தறை, ஹம்பாந்தோட்டை, காலி, மொனறாகலை ஆகிய நான்கு மாவட்டங்கள் உள்ளடக்கி “படியுங்கள் வெல்லுங்கள்” போட்டி நிகழ்ச்சிகள் மூலம் அப்பகுதி மாணவர்களின் இஸ்லாமிய அறிவு மேம்படுத்த முயற்சி செய்யப்பட்டது.
  • அறபா தேசிய பாடசாலையில் உயர் வகுப்பில் கல்வி கற்ற மாணவர்கள் பலருக்கு உதவி வழங்கப்பட்டது.

Leave a Reply